இனிய வணக்கங்கள். இன்றைய செவ்வாய்கிழமை  நல்ல நாளில், நல்லதொரு மாசி நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

திட்டமிட்ட செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரிஷபம்:

மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். தொழில், வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களால் பணிச்சுமைக்கு ஆளாவர். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். பெண்களுக்கு சகோதரவழியில் உதவி கிடைக்கும்.

மிதுனம்:

மனதில் நேர்மை எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பும், அரவணைப்பும் பெறுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.

கடகம்:

பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுப்பீர்கள். தொழில் வளர்ச்சியால் வியத்தகு முன்னேற்றம் காண்பீர்கள். லாபம் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.

சிம்மம்:

வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பிள்ளைகளின் வழியில் ஆடம்பரச் செலவு ஏற்படும்.

கன்னி:

நண்பரின் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். தொழில் வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

துலாம்:

முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு கொள்வர். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

விருச்சிகம்:

திட்டமிட்ட செயல் இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வங்கி நிதியுதவியுடன் மூலதனத்தை அதிகப்படுத்துவீர்கள். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆன்மிக நாட்டமுடன் செயல்படுவர்.

தனுசு:

முக்கியப் பணியை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் திணறுவர். வீடு, வாகன வகையில் திடீர் செலவு ஏற்படும். தெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும்.

மகரம்:

மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் நிலுவைப் பணியை விரைந்து முடிப்பர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

கும்பம்:

குடும்ப விஷயத்தைப் பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டியால் லாபம் சுமாராக கிடைக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்க நேரிடலாம். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.

மீனம்:

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பணிகளைத் திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here