இனிய வணக்கங்கள். இன்றைய திங்கள்கிழமை  நல்ல நாளில், நல்லதொரு மாசி நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

உற்சாக மனப்பான்மையுடன் பணியாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் குறுக்கிட்ட இடையூறு விலகும். லாபம் படிப்படியாக உயரும். கடனில் பெரும்பகுதி அடைபடும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு மறையும்.

ரிஷபம்:

சிலரது பேச்சால் சங்கடத்திற்கு ஆளாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

மிதுனம்:

திடீர் அவசரப்பணியால் சிரமப்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டி குறுக்கிடும். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் பிள்ளைகளின் வழியில் செலவு செய்வர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

கடகம்:

நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரிடம் பரிசு, பாராட்டு காண்பர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டாகும். நண்பர்களுடன் பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம்:

மனதில் இருந்த குழப்பம் நீங்கும். வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். பிள்ளைளின் அன்பைப் பெற்று மகிழ்வீர்கள்.

கன்னி:

சிலர் சுயநல எண்ணத்துடன் நெருங்கிப் பழகுவர். தொழில் வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து ஓரளவு விடுபடுவர். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க கூடாது. பெற்றோரின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.

துலாம்:

அறிமுகம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் குறுக்கிட்ட இடையூறு விலகும். வருமானம் சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர்.

விருச்சிகம்:

எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். தொழில் வளர்ச்சியால் ஆதாயம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். மாமன், மைத்துனருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். காணாமல் தேடிய பொருள் கை வந்து சேரும்.

தனுசு:

நண்பரின் செயலை விமர்சிக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மிதமான வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். எதிர்பார்த்த சுப செய்தி தாமதமாகலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம்:

நேர்மை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். முயற்சி முழு அளவில் வெற்றி பெறும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உண்டாகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம்:

யாரிடமும் குடும்பவிஷயத்தைப் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு கொள்வர். உறவினர் வகையில் திடீர் செலவு உண்டாகும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

மீனம்:

வாழ்க்கைத்தரம் மேம்படும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். உடல்நிலை பலம் பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here