இனிய வணக்கங்கள். இன்றையசனிக்கிழமை  நல்ல நாளில், நல்லதொரு மாசி நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். வீடு, வாகனப் பாதுகாப்பில் கவனம் தேவை.

ரிஷபம்:

எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். புத்திரரின் அன்பைப் பெற்று நிம்மதி காண்பீர்கள்.

மிதுனம்:

பேச்சு, செயலில் கலகலப்பு மிகுந்திருக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

கடகம்:

நண்பரின் எதிர்பார்ப்பு அறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.

சிம்மம்:

எதிர்கால நலன் குறித்து திட்டமிடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைத் திறம்பட சமாளிப்பர். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.

கன்னி:

குடும்ப விஷயத்தை பிறரிடம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுவர். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். நண்பர்களால் உதவி உண்டு.

துலாம்:

மனதில் உற்சாகமும், செயலில் நேர்மையும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் மறைமுகப்போட்டி விலகும். லாபம் திருப்தியளிக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

விருச்சிகம்:

குடும்பத்தினரின் அதிருப்திக்கு ஆளாகலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களால் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

தனுசு:

மனதில் புத்துணர்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் நட்புணர்வுடன் பழகுவர். ஆரோக்கியம் பலம் பெறும். பிள்ளைகளின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

மகரம்:

பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியர் செல்வர். பெண்களுக்கு பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கும்பம்:

இடையூறாக செயல்பட்டவர் இடம் மாறிச் செல்வர். தொழில் வியாபாரத்தில் வங்கி நிதியுதவியுடன் விரிவுபடுத்துவீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும். அரசு வகையில் நன்மை பெறுவீர்கள்.

மீனம்:

உறவினருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிலுவைப் பணமும் வசூலாகும். பணியாளர்கள் சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here