இனிய வணக்கங்கள். இன்றைய வெள்ளிகிழமை நல்ல நாளில், நல்லதொரு மாசி நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் பொறுப்பு அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பெண்கள் பணம், நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

ரிஷபம்:

பொறுப்பை உணர்ந்து செயல்படுவீர்கள். அவமதித்தவரும் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் புத்தாடை ஆபரணம் பெற யோகம் உண்டு.

மிதுனம்:

எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். பணியாளர்கள் விரும்பிய சலுகை கிடைக்கப் பெறுவர். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். அரசு வகையில் நன்மை கிடைக்கும்.

கடகம்:

சிலரது பேச்சால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் பிள்ளைகளின் வழியில் செலவு செய்வர். அரசியல்வாதிகள் இதமான அணுகுமுறை பின்பற்றவும்.

சிம்மம்:

அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மந்தநிலையைச் சந்திப்பீர்கள். பணியாளர்கள் சக ஊழியர்களால் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்களுக்கு செலவில் சிக்கனம் தேவை. தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

கன்னி:

நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிகளை விரைந்து முடிப்பர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

துலாம்:

முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சுமாராக கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்பநலனுக்காகப் பாடுபடுவர். உடல்நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம்.

விருச்சிகம்:

மனதில் நேர்மை எண்ணம் மேலோங்கும். தொடங்கும் பணி தடையின்றி நிறைவேறும். தொழில் வியாபாரம் வியப்பூட்டும் வகையில் வளர்ச்சி பெறும். சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு:

குடும்ப விஷயத்தை பிறரிடம் பேச வேண்டாம். தொழில் வளர்ச்சி பெற விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையால் திண்டாடுவர். கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மகரம்:

சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கும் வகையில் தாராள பணவரவு உண்டு. காணாமல் தேடிய பொருள் கை வந்து சேரும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கும்பம்:

வாழ்வில் இனிய அனுபவம் உண்டாகும். சமூக விஷயத்தில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

மீனம்:

மறைமுக எதிரியை இனம் கண்டு விலகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். உடல்நிலை திருப்தியளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here