இனிய வணக்கங்கள். இன்றைய வியாழக்கிழமை நல்ல நாளில், நல்லதொரு மாசி நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் சராசரி அளவில் வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்கள் பணம், நகை இரவல் கொடுப்பது கூடாது. நண்பரால் உதவி உண்டு.

ரிஷபம்:

எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்தினர் உதவிகரமாக செயல்படுவர். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்க வாய்ப்புண்டு.

மிதுனம்:

மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். பெற்றோர் நலனில் அக்கறை கொள்வீர்கள்.

கடகம்:

சிறிய வேலைக்கும் விடா முயற்சி தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும். லாபம் சுமாராக இருக்கும். விருந்தினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையளிக்கும்.

சிம்மம்:

எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். நண்பரின் உதவி ஓரளவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

கன்னி:

வாழ்வில் இனிய அனுபவம் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

துலாம்:

மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சமாளிக்க முடியாமல் திணறுவர். பெண்கள் கணவரின் அன்பை பெறுவர்.வாகனப் பயணத்தில் மித வேகம் நல்லது.

விருச்சிகம்:

அனைவரிடமும் அன்பு காட்டி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உண்டாகும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வரும்.

தனுசு:

முக்கிய செயல் நிறைவேற தாமதமாகலாம்.தொழில் வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பெணகள் குடும்பச் செலவுக்காக கடன் வாங்குவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம்:

இஷ்டதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். பெண்கள் தாய்வீட்டுப் பெருமையை நிலைநாட்டுவர்.

கும்பம்:

பேச்சில் இனிமை நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வங்கிநிதியுதவியுடன் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவீர்கள். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள். வீடு, வாகனம் வாங்க வாய்ப்புண்டு.

மீனம்:

சிலரது பேச்சு உங்கள் மனதை பாதிக்கலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமப்படுவர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். உடல்நிலையில் கவனம் தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here