இனிய வணக்கங்கள். இன்றைய புதன்கிழமை நல்ல நாளில், நல்லதொரு தை நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். உடல்நலனில் அக்கறை தேவை. பெற்றோரின் பேச்சு ஆறுதல் அளிக்கும்.

ரிஷபம்:

பேச்சு, செயலில் புதிய உற்சாகம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

மிதுனம்:

சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் மூலதனத்தை அதிகப்படுத்துவீர்கள். லாபம் உயரும். பணியாளர்கள் சுதந்திர மனப்பான்மையுடன் பணிபுரிவர். குடும்பத்தில் சுபவிஷய பேச்சு நடக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி வளரும்.

கடகம்:

உறவினர்கள் எதிர்பார்ப்புடன் அணுகுவர். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்களுக்கு வீட்டுச் செலவு அதிகரிக்கும். உஷ்ண வியாதியால் சிரமப்படலாம்.

சிம்மம்:

அன்றாடப்பணி கூட சுமையாக தோன்றலாம். தொழில், வியாபாரத்தில் சுமாரான அளவில் லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்கள் பணம், நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். நண்பரால் உதவி உண்டு.

கன்னி:

மதிநுட்பத்துடன் செயல்பட்டு வருவீர்கள். தொழில்,வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்கள் விரும்பிய பணிமாற்றம் கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

துலாம்:

உங்களின் பேச்சு சிலரை அதிருப்திக்கு ஆளாக்கலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். உறவினர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்:

எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். உறவினரால் உதவி உண்டு.

தனுசு:

குடும்ப விஷயத்தை பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்களுக்கு பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.

மகரம்:

நண்பரின் உதவி கிடைக்கும். முக்கிய விஷயத்தில் சுமுகத் தீர்வு கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் சாதனை படைப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்:

வாழ்வில் இனிய அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் தாராள வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் குடும்பநலனில் அக்கறை கொள்வர். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

மீனம்:

முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களின் எதிர்ப்பை சந்திப்பர். பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம் உண்டாகலாம். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here