இனிய வணக்கங்கள். இன்றைய செவ்வாய்கிழமை நல்ல நாளில், நல்லதொரு தை நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

சிறிய முயற்சியிலும் பெரிய நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு உருவாகும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்:

எதிர்பார்ப்பு நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். பயணத்தின் போது கவனம் தேவை.

மிதுனம்:

பிறருக்காக தகுதி மீறிய வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. நண்பரால் உதவி உண்டு.

கடகம்:

மனதில் புத்துணர்ச்சி நிறைந்திருக்கும். தொழில் ,வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

சிம்மம்:

உங்களின் பேச்சு சிலரை சங்கடப்படுத்தலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பூர்வீகச் சொத்து மூலம் பணவரவு கிடைக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.

கன்னி:

சிலர் சுயநலத்துடன் உங்களிடம் பழகலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பாக்கிப் பணம் வசூலாகும். உடல்நலம் பலம் பெறும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். அரசாங்க வகையில் நன்மை கிடைக்கும்.

துலாம்:

எதிலும் நிதானம் தேவைப்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்கலாம். தாயின் ஆறுதல் பேச்சு நம்பிக்கை அளிக்கும்.

விருச்சிகம்: நல்லவர் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

தனுசு:

தடைகளை முறியடித்து முன்னேறுவீர்கள். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் உயரும். பணக்கடனில் ஒருபகுதி அடைபடும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

மகரம்:

முக்கிய பொறுப்புகளைப் பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாகலாம். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு கூடும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கும்பம்:

குடும்பத்தினரால் அதிருப்திக்கு ஆளாவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் தாய்வீட்டாரின் உதவியைக் கேட்டுப் பெறுவர்.

மீனம்:

உழைப்பால் வாழ்வில் உயர்வு பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் படிப்படியாக உயரும். சேமிப்பு கூடும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளுக்காக பணம் செலவழிப்பர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here