இனிய வணக்கங்கள். இன்றைய திங்கள்கிழமை நல்ல நாளில், நல்லதொரு தை நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். பேச்சு, செயலில் நேர்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

ரிஷபம்:

எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். சேமிக்கும் விதத்தில் வருமானம் உயரும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். நண்பர்களுடன் பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள்.

மிதுனம்:

நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப ஆதாயம் கிடைக்கும். உறவினர் வகையில் திடீர் செலவு ஏற்படலாம். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

கடகம்:

பணிகள் நிறைவேற முன்னேற்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் தடைகள் குறுக்கிட்டு விலகும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். பெண்கள் பிள்ளைகளுக்கு தாராளமாகச் செலவழிப்பர்.

சிம்மம்:

மனதில் புத்துணர்வு மேலோங்கும். உறவினருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில்; அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். வருமானம் திருப்தியளிக்கும். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்து பேசுவீர்கள்.

கன்னி:

வாழ்வில் இனிய அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராவர். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.

துலாம்:

உறவினரிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்பீர்கள்.

விருச்சிகம்:

பொது இடங்களில் நிதானமுடன் பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் பிள்ளைகளால் சிரமத்திற்கு ஆளாகலாம்.

தனுசு:

உங்களின் நற்குணத்தை பலரும் பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் ஆதரவால் முன்னேறுவர். பிள்ளைகளின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மகரம்:

மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடம்பரச் செலவில் ஈடுபடுவர்.

கும்பம்:

சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதியை மீறலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைச் சமாளிக்க திணறுவர். உடல்நலனில் அக்கறை தேவை. பெற்றோரின் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது.

மீனம்:

அவசர பணிகளால் சிரமத்திற்கு ஆளாகலாம். அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வருமானம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை தாமதமாகும். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here