இனிய வணக்கங்கள். இன்றைய ஞாயித்துகிழமை நல்ல நாளில், நல்லதொரு தை நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

உற்சாக மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவி வரும். அரசு வகையில் நன்மை உண்டு.

ரிஷபம்:

உங்கள் செயலில் கவனச் சிதறல் ஏற்படலாம். தொழில், வியாபாரம் சிறக்க விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பிள்ளைகளின் நற்செயல் மனதிற்கு ஆறுதல் அளிக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.

மிதுனம்:

எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரம் மந்தகதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைத் திறம்பட சமாளிப்பர். பயணத்தில் மாறுதல் ஏற்படலாம். பெண்கள் ஆடம்பரமாக செலவழிப்பர்.

கடகம்:

பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். ஆதாயம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்:

அனுபவசாலியின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் பிள்ளைகளின் வழியில் திடீர் செலவுக்கு ஆளாவர்.

கன்னி:

சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபார வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பணியாளர்கள் சக ஊழியர்களின் பாராட்டைப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

துலாம்:

அறிமுகம் இல்லாதவர்களிடம் சொந்த விஷயம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மறைமுகப்போட்டி அதிகரிக்கும். லாபம் சுமார். பணியாளர்கள் திடீர் பணிச்சுமையால் அவதிப்படுவர். வாகனத்தில் மிதவேகம் நல்லது.

விருச்சிகம்:

நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். லாபம் உயரும். பணியாளர்கள் சலுகையைப் பெற்று மகிழ்வர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

தனுசு:

பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்தி லாபம் காண்ர்பீர்கள். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். பாக்கிப் பணம் வசூலாகும். குடும்ப பிரச்னைக்கு சாதகமான தீர்வு கிடைக்கும்.

மகரம்:

மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சிக்கான வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். லாபம் படிப்படியாக உயரும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

கும்பம்:

உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தொழில், வியாபாரத்தில் குறையை சரிசெய்வது நல்லது. ஆதாயம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

மீனம்:

கடந்த கால முயற்சிக்குரிய பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டி விலகும். லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் ஆதரவால் முன்னேறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here