இனிய வணக்கங்கள். இன்றைய சனிக்கிழமை நல்ல நாளில், நல்லதொரு தை நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

சுற்றுப்புற சூழலின் தாக்கம் உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர்.

ரிஷபம்:

மனதில் உருவான திட்டம், செயல் வடிவம் பெறும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம்.தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். மனைவி கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.

மிதுனம்:

தனித்திறமையுடன் செயல்படுவீர்கள். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, எதிரியால் இருந்த தொல்லை குறையும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும்.

கடகம்:

முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வகையில் திடீர் செலவு ஏற்படலாம். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் தரும்.

சிம்மம்:

பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவதால் மட்டுமே, எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல்நலம் சீராகும். அரசுவகையில் ஆதாயம் கிடைக்கும்.

கன்னி:

இனிய அணுகுமுறையால் நற்பலன் பெறுவீர்கள். விலகி சென்ற உறவினர், விரும்பி சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர்.

துலாம்:

திட்டமிட்ட பணி தாமதமாகலாம். நண்பரின் ஆலோசனை நம்பிக்கைக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தன்மை பாதுகாப்பது நல்லது. மிதமான பணவரவு இருக்கும்.வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.

விருச்சிகம்:

மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கருணை மனதுடன் பிறருக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். புத்திரர் வெகுநாள் விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

தனுசு:

குடும்பத்தினரின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகலாம். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம்:

நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கும்பம்:

மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழித்து ஆதாய பணவரவு அதிகரிக்கும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சி பற்றிய பேச்சு நடக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம்:

மாறுபட்ட சூழலால் அதிருப்தி உருவாகலாம். நிலுவைப் பணியை முடிக்க விரைந்து செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சுமாரான வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் திடீர் செலவு உண்டாகும். இஷ்ட தெய்வ வழிபாடு அமைதி்க்கு வழிவகுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here