இனிய வணக்கங்கள். இன்றைய வியாழக்கிழமை நல்ல நாளில், நல்லதொரு தை நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

சுயகவுரவத்தை சோதிக்கும் விதமாக சிலர் பேசுவர். தொழில், வியாபாரத்தில் போட்டியை சரிசெய்வீர்கள் பணவரவை விட செலவு அதிகரிக்கும். சத்து நிறைந்த உணவு உண்பது அவசியம். பிள்ளைகளால் உதவி உண்டு.

ரிஷபம்:

கடந்த கால அனுபவம் நல்ல படிப்பினையை தரும். தொழில் சார்ந்த அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. லாபம் சுமார். பெண்களுக்கு திடீர் செலவால் சேமிப்பு கரையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நண்பரின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்:

பணிகளில் குளறுபடி ஏற்படலாம் கவனம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.

கடகம்:

நண்பர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வாழ்வில் வளம் பெற புதிய வாய்ப்பு உருவாகும். தொழில், வியாபார இலக்கு எளிதில் பூர்த்தியாகும். லாபம் பன்மடங்கு உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

சிம்மம்:

மற்றவர் அவதுாறு கருத்துக்களை பொருட்படுத்த வேண்டாம். கூடுதல் உழைப்பினால் தொழிலில் வருமானம் உயரும். பணியாளர்க் பணி விஷயமாக வெளியூர் செல்வர். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது.

கன்னி:

பிறர் நலனில் அக்கறை கொள்வீர்கள். நல்லவர் அறிமுகத்தால் நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரத் தொடர்பு பலம் பெறும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

துலாம்:

மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். இடையூறுகளை சமயோசிதமாக சரி செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். நிலுவைப் பணம் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

விருச்சிகம்:

எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சுமாராக இருக்கும். திடீர் செலவால் சேமிப்பு பணம் கரையும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.

தனுசு:

குடும்பத்தேவையை நிறைவேற்ற தாமதமாகலாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் முயற்சி தேவை. மிதமான பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். அதிக விலையுள்ள பொருளை கவனமுடன் பாதுகாப்பது நல்லது.

மகரம்:

மனதில் மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். லாபம் கூடும். தான தர்மத்திற்கு செலவு செய்வீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

கும்பம்:

முக்கிய பிரச்னையில் சுமுகத்தீர்வு ஏற்படும். அன்றாட பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் உருவாகும். தாராள பணவரவு கிடைக்கும்.மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம்:

மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபார நடைமுறை தாமதகதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சோர்வுக்கு ஆளாவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here