இனிய வணக்கங்கள். இன்றைய வெள்ளிக்கிழமை நல்ல நாளில், நல்லதொரு தை நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

பிறரை நம்பி எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபார நடைமுறை சீராக கூடுதல் உழைப்பு அவசியம். சராசரி பணவரவு கிடைக்கும்.அரசியல்வாதிகள் சமரசம் பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும்.

ரிஷபம்:

வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். நண்பரின் ஆலோசனையால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வந்து சேரும். பணியாளர்களுக்கு சிறந்த பணிக்காக பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.

மிதுனம்:

நற்செயலில் ஈடுபட்டு பெருமிதம் காண்பீர்கள். சுபநிகழ்வு நடத்தும் சூழல் குடும்பத்தில் உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து சமூகத்தில் புகழ் பெறுவீகர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்தரம் உயரும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்ப்பாளரால் இருந்த தொல்லை குறையும்.

கடகம்:

சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். புதிய இனங்களில், திடீர் செலவு அதிகரிக்கும். பெண்கள் அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலம் பெற உதவும்.

சிம்மம்:

முக்கிய பணி ஒன்றை மறந்திடுவீர்கள். குடும்ப உறுப்பினர் நினைவுப்படுத்தி உதவுவர். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும்.கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

கன்னி:

பூர்வபுண்ணிய நற்பலன் துணை நிற்கும். தொழில், வியாபாரம் வியத்தகு வளர்ச்சி பெறும்.உபரி பணவருமானம் வந்து சேரும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மனைவி கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.

துலாம்:

போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில்,வியாபாரத்தில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம்.

விருச்சிகம்:

நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். செயல்களில் பொறுப்புணர்வுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி உருவாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். உறவினர் மூலம் சுபசெய்தி வந்து சேரும்.

தனுசு:

இரக்க குணத்தால் பிறருக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வது நல்லது. குறைந்த அளவில் பணவரவு இருக்கும்.உடல் நலத்திற்கு சிறு அளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.

மகரம்:

தொல்லை கொடுத்தவர், இடம் மாறிப் போகிற சூழ்நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். வருமானம் திருப்தியளிக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். தாயின் தேவையை நிறைவேற்றி ஆசி பெறுவீர்கள்.

கும்பம்:

உங்கள் மனதில் ஆன்மிக எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் தாராள முன்னேற்றம் உருவாகும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும்.மாமன், மைத்துனருக்கு தேவையான உதவி செய்வீர்கள். பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.

மீனம்:

வழக்கத்திற்கு மாறான பணி உருவாகி தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். நிலுவைப்பணம் கூடுதல் முயற்சியால் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here