இனிய வணக்கங்கள். இன்றைய வியாழக்கிழமை நல்ல நாளில், நல்லதொரு தை நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

திட்டமிட்டு செயல்படுவது அவசியம். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழிலில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. பிள்ளைகளின் வழியில் செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும்.

ரிஷபம்:

பரந்த மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். நல்லவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆதாயம் திருப்தியளிக்கும். புத்திரரின் நற்செயல் பெருமை தேடித் தரும்.

மிதுனம்:

உறவினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாமதமான பணியை புதிய உத்தியால் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படும். லாபம் அதிகரிக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள்.

கடகம்:

நற்செயலுக்கான பாராட்டு வந்து சேரும். மனதில் உற்சாகம் மேலோங்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய யுக்தி பயன்படுத்துவீர்கள். மிதமான பணவரவு கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர்.

சிம்மம்:

பணி நிறைவேற பொறுமை அவசியம். தொழிலில் உள்ள குறைகளை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். உறவினர் வருகையால் செலவு அதிகரிக்கும். அரசு தொடர்பான அனுகூலம் தாமதமாகலாம். இஷ்ட தெய்வ வழிபாடு அமைதிக்கு வழிவகுக்கும்.

கன்னி:

பிறர் பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சியால் கூடுதல் பணவரவு கிடைக்கும். வீடு, வாகனத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாம்:

மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். தொழிலில் கடின உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். பெற்றோரின் அன்பும், ஆசியும் நம்பிக்கை தரும்.

விருச்சிகம்:

நேர்த்தியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி ஏற்படும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மாமன் மைத்துனருக்கு உதவுவீர்கள்.சுற்றுலா சென்று வர பயணத்திட்டம் உருவாகும்.

தனுசு:

எவரிடமும் தற்பெருமை எண்ணத்துடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் பலம் பெறும்.

மகரம்:

இஷ்ட தெய்வ வழிபாட்டால் நன்மை காண்பீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும்.அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். லாபம் உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கும்பம்:

அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற நிலை உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

மீனம்:

நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடு வரலாம்.பொறுமையுடன் செயல்படுவதால் சிரமம் விலகும். வருமானம் மிதமாக இருக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here