இனிய வணக்கங்கள். இன்றைய புதன்கிழமை நல்ல நாளில், நல்லதொரு தை நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

நேர்மையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கடந்த கால உழைப்பிற்கான நன்மை வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.

ரிஷபம்:

பேச்சில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சியால் சாதனை இலக்கை அடைவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். விருந்து விழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம்:

மனதில் தற்பெருமை எண்ணம் மேலோங்கும். குடும்பத்தினரின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான அளவில் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம்.

கடகம்:

செயலில் கூடுதல் அக்கறை தேவை. தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். சிலர் திடீர் செலவால் கடன் வாங்க நேரிடும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

சிம்மம்:

மனதில் அன்பும், கருணையும் மேலோங்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கன்னி:

உடல்நலனில் அக்கறை தேவை. தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்குவர். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

துலாம்:

எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவீர்கள். நண்பரின் ஆலோசனையால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

விருச்சிகம்:

சிலர் சுயலாபம் பெற உங்களை நெருங்குவர். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். பெண்கள் உறவினர்களிடம் விவாதம் பேச வேண்டாம்.

தனுசு:

வாழ்வில் இனிய அனுபவம் காண்பீர்கள். திட்டமிட்ட செயல் எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும். உறவினர் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வர்.

மகரம்:

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். வாழ்வில் கூடுதல் நன்மை பெற புதிய வாய்ப்பு உருவாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கும்பம்:

நல்லவர் செயலையும் தவறாக கருதும் சூழல் ஏற்படலாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். மிதமான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்ல வேண்டாம்.

மீனம்:

குடும்ப கஷ்டத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். பணி நிறைவேற கூடுதல் முயற்சி அவசியம். தொழில் வியாபாரத்தில் படிப்படியாக வளர்ச்சி ஏற்படும். மிதமான வருமானம் கிடைக்கும்.உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here