இனிய வணக்கங்கள். இன்றைய செவ்வாய்க்கிழமை நல்ல நாளில், நல்லதொரு தை நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

நற்செயலில் ஈடுபட்டு நண்பரால் பாராட்டப்படுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசு வகையில் ஆதாயம் உண்டு.

ரிஷபம்:

எண்ணம், செயலில் உற்சாகம் நிறைந்திருக்கும். கூடுதல் உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும்.பணவரவு திருப்தியளிக்கும். புத்திரர் படிப்பில் முன்னேற உதவுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

மிதுனம்:

உறவினரின் பாசம் கண்டு வியப்பு உண்டாகலாம். எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பொறுப்பு அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். நண்பரால் உதவி உண்டு.

கடகம்:

சுற்றுப்புற சூழ்நிலை உணர்ந்து பேசுவது நல்லது. முக்கியமான பணி நிறைவேற அவகாசம் தேவைப்படும்.தொழிலில் லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்குவர். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

சிம்மம்:

உங்களின் செயலில் திறமை வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பணவரவில் சேமிப்பு கூடும். பணிபுரியும் பெண்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

கன்னி:

உங்களின் செயலை சிலர் விமர்சனம் செய்யலாம். பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். தொழிலில் சராசரி உற்பத்தி விற்பனை இருக்கும். லாபம் சுமார். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

துலாம்:

நண்பருக்கு ஆலோசனை சொல்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள்.பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

விருச்சிகம்:

எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

தனுசு:

ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உண்டாகும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத் தேவை பெருமளவில் நிறைவேறும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

மகரம்:

எதிரியால் இருந்த தொல்லை மறையும். வெற்றிப் பாதையில் வீறுநடை போடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும்.ஆதாயம் பன்மடங்கு உயரும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம்:

திட்டமிட்ட செயல் நிறைவேற தாமதமாகலாம். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் திடீர் செலவு ஏற்படலாம். உணவுப் பொருள் தரமறிந்து உண்ணவும். தாயின் அன்பு ஆசி மனதிற்கு ஆறுதல் தரும்.

மீனம்:

மனம் வருந்தும்படி சிலர் பேச வாய்ப்புண்டு. பொது விஷயங்களில் கருத்து சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் தாமதகதியில் இயங்கும். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here