இனிய வணக்கங்கள். இன்றைய திங்கள்கிழமை நல்ல நாளில், நல்லதொரு தை நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

தாமதமான செயலில் அனுகூலம் தேடி வரும். நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு அளவில் வளர்ச்சி பெறும். லாபம் உயரும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

ரிஷபம்:

மனதிற்கு சங்கடமான சூழ்நிலை உருவாகலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் பொறுப்பு அதிகரிக்கும். பணவரவு சுமார். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். பிராணிகளிடம் விலகுவது நல்லது. அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

மிதுனம்:

உடல்நலத்தில் கவனம் அவசியம். திட்டமிட்ட செயல் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரம் சீர்பெற நண்பரின் உதவி கிடைக்கும். வருமானம் சீராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பெண்களுக்கு தாய்வீட்டாரின் உதவி உண்டு.

கடகம்:

உங்களின் கருத்துக்கு குடும்பத்தினர் மதிப்பளிப்பர். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். வாகனப் பயணம் இனிதாக அமையும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

சிம்மம்:

உங்களை சிலர் குறை சொல்ல காத்திருப்பர். செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவது அவசியம்.தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேறும்.பணவரவு சுமாராக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டால் மனதில் புத்துணர்வு பிறக்கும்.

கன்னி:

நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளின் நற்செயலால் பெருமிதம் கொள்வீர்கள்.தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

துலாம்:

எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இயங்கும்.பிறர் பார்வையில் அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் குறிப்பறிந்து நடப்பது நல்லது. தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.

விருச்சிகம்:

இஷ்ட தெய்வ அனுகிரகத்தால் நன்மை உண்டாகும். அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

தனுசு:

நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். குடும்பத்தினர் அதிக அன்பு பாராட்டுவார். தொழில் வியாபாரத்தில் இருக்கிற குறுக்கீடு விலகும். வருமானம் உயரும். பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

மகரம்:

உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேற தாமதமாகும். மிதமான பணவரவு கிடைக்கும். திடீர் செலவால் சேமிப்பு பணம் கரையும். பெண்கள் எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதி தர வேண்டாம்.

கும்பம்:

பேச்சு, செயலில் நிதானம் பின்பற்றவும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் உண்டாகும்.

மீனம்:

மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கடந்த கால உழைப்பின் பயன் கிடைக்கப்பெறுவீர்கள். லாபம் உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் குடும்பத்தினருடன் விருந்து விழாவில் பங்கேற்பர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here