நிகழும் ஹேவிளம்பி வருடம் தை மாதம் 18-ம் தேதி புதன்கிழமை (31-01-2018) சந்திர கிரகணம் மாலை 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை முழு சந்திர கிரகணம் இருக்கும். 7.37 மணி முதல் நிழல் விலக ஆரம்பித்து 8.41 மணிக்கு முழுமையாக விலகிவிடும். இருப்பினும் இரவு 9.38 மணிக்கு பிறகே நிலவு அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.

சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும்போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.

பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.

சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.

சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும்

பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.

சந்திர கிரகணம் பற்றி புராணக்கதை என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்….

சந்திரன் அவர் செய்த பாவம் காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரைப் பிடித்து அவரை முடமாக்க நினைக்கிறார். ஆனால் சந்திரன், பகவானைப் பிரார்த்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது. இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனைப் பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும்.

கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் எனப் புராணங்கள் கூறுகிறது. ஆனால் சந்திரனின் கதிர்களின் கதிர்வீச்சில் ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களைப் பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்தவித உணவும் உட்கொள்ளக் கூடாது.

கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது.

ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினைப் போட்டு வைக்க வேண்டும்.

கிரகணத்தின் போது நவக்கிரக துதியைப் பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

கிரகண விடுபடும் போது அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனைத் துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளைக் கொடுக்கும்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here