ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடந்து முடிந்தது . சென்னை அணி இன்றுதான்  ஏலம் எடுக்க தொடங்கி இருக்கிறது என்று கூட சொல்லலாம். வரிசையாக நிறைய வீரர்களை எடுத்து வந்தது .

நிறைய வீரர்கள் புதிய முகங்களாக இருக்கிறார்கள். புதிதாக 30 நிமிடத்தில் 5 வீரர்களை எடுத்துள்ளது. வெறும் 2 கோடிக்கு 5 வீரர்கள் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த மாஸ்டர் பிளான் தெரியாமல் சென்னை அணியை நேற்று கழுவி ஊத்திய ரசிகர்கள் இன்று தலையில் தூக்கி வைத்து கொண்டடி வருகின்றனர் .

தோனி, ரைனா, ஜடேஜா

ஏற்கனவே ரீடைன் வாய்ப்பு மூலம் இந்த மூன்று சிங்கங்களை சென்னை அணி எடுத்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே . இந்த மூன்று வீரர்களும் அவரவர் பிரிவில் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்க கூடியவர்கள்.

ஹர்பஜன் சிங்

கடந்த சில நாட்களாகவே தமிழ் மக்களின் மீது ஆர்வம் காட்டியவரை சென்னை அணி எடுத்துள்ளது.  2 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரது குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். அஸ்வினுக்கு பதில் இவர் ஸ்பின் பவுலாராக இருப்பார்.


கேதார் ஜாதவ்

யாரும் எதிர் பார்க்காத நிலையில் சென்னையால் ஐபிஎல் ஏலத்தில் கேதார் ஜாதவ் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் இந்திய அணிக்காகவும் கடந்த சில போட்டிகளில் பங்கு பெற்று சிறப்பாக ஆடியதால் இந்த விலைக்கு எடுக்கபட்டார் என எதிர்பார்க்கபடுகிறது . இதற்கு முன்பு இவர் கொச்சி, டெல்லி, பெங்களூர் ஆகிய அணிக்காக விளையாடி இருக்கிறார். இவர் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.


வாட்சன்

கடந்த 10 ஐபிஎல் போட்டிகளில்   கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருபவர் வாட்சன் இவர் ஆஸ்திரேலியா அணியின்  மிகச்சிறந்த வீரராக கருதபடுபவர்.வர் நான்கு கோடிக்கு வாங்கப்பட்டார்


அம்பதி ராயுடு

ஐபிஎல் போட்டிகள் என்றாலே இவரது பெயர் அடிபடாமல் இருக்காது அந்த அளவிற்கு கடந்த சில ஆட்டங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அம்பதி ராயுடு.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 2.2 கோடிக்கு அம்பதி ராயுடு எடுக்கப்பட்டார். இவரது வருகை சென்னை அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.


கரன் சர்மா 


கரன் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 5 கோடிக்கு கார்ன் சர்மா எடுக்கப்பட்டார். இவருடைய குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். இந்தியாவை சேர்ந்த வளரும் பவுலர்களில் இவரும் ஒருவர்.

இம்ரான் தாஹிர்

சுழற் பந்து வீச்சில் தற்போது ஜாம்பவானாக இருப்பவர் இம்ரான் தாஹிர் இவர் தென்னபிரிக்க வீரர் ஆவார். இவர்  t20 போட்டிகளின் சிறந்த வீரர் ஆவர் அதனால் இவரை எடுத்தது  சென்னை அணிக்கு பெரிய பலமாக இருக்கும்.

மோனு சிங்

இவர் இந்தியாவின் வளர்ந்துவரும் வேக பந்து வீச்சாளர் ஆவார் . நிறைய உள்ளூர் போட்டிகளில் விளையாடி மிகச்சிறந்த இடத்தை பிடித்துள்ளார் .


மார்க் வூட்

இவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடியவர் இவரும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களில் ஒருவர் மிதவேக மற்றும் கடைசி ஓவர்களில் சிறப்பாக செயல்படுவதற்காக சென்னை அணி இவரை எடுத்துள்ளது


சாம் வில்லிங்க்ஸ்

இவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் விக்கெட் கீப்பர் மற்றும் மிகச்சிறந்த அடித்து ஆடும் வல்லமை கொண்டவர். இவர் குறிப்பாக கடைசி நேர ஓவர்களில்  சிறப்பாக விளையாட கூடியவர்.


முரளி விஜய்

கடந்த ஆண்டுகளில் சென்னை அணியின் செல்ல பிள்ளை இவர் . இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி கொண்டிருப்பவர் . யாரும் எடுக்காத நிலையில் மீண்டும் சென்னை அணியே இவரை எடுத்துள்ளது.


துருவ் சோறே

இவர் இந்திய அணியின் ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருபவர் . இவர் ஒரு மிக சிறந்த ஆட்டக்காரர் குறிப்பாக அடித்து ஆடுவதில் வல்லவர் . இந்த காரணத்திற்காக சென்னை அணி இவரை எடுத்திருக்கலாம்.


கணிஷேக் செத்

இவர் இந்திய வீரர், இந்தியாவில் பெங்கால் அணிக்காக t20 போட்டிகளில் விளையாடி சிறப்பாக செயல் பட்டவர் . இவர் இருபது ஓவர் விளையாட்டிற்காகவே செய்ய பட்ட வீரர் ஆவார் .


லுங்கிஸ்னி நகி:

தென்னப்பிரிகாவிர்க்கு எதிரான கடந்த இரண்டு  டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியை தினரடிதவர் இவர் .   இவர் ஒரு மிக சிறந்த வேகபந்து வீச்சாளர் . இவரை   எடுத்தது சென்னை அணிக்கு மேலும் பக்க பலமாக அமையும்.

ஆசிப் 

இவர் கேரளா கிரிக்கெட் வீரர் . மிகச்சிறந்த பந்து வீச்சாளர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தனது முதல் இருபது ஓவர் ஆட்டத்தை ஆடினார் என்பது குறிப்பிடதக்கது.


தீபக் சகார்

இவர் இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் வீரர் ஆவார், இவர் ராஜஸ்தான் அணியை சேர்ந்தவர். இவர் கடந்த முறை புனே அணிக்காக விளையாடியவர்.


மிட்செல் சண்ட்நர்

இவர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மிகச்சிறந்த சுழற் பந்து வீச்சாளர் இவர் சென்னை அணிக்காக மிக பெரும் பங்களிப்பை அளிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது.


ஜெகதீசன் நாராயணன்:

இவர் தமிழக அணியின் இளம் ஆட்டக்காரர்களில்  ஒருவர் . இவர் விக்கெட் கீப்பர் மற்றும் மிகச்சிறந்த ஆட்டக்காரர் ஆவார்.


ஷர்துல் தாகூர்

இவர் கடந்த முறை புனே அணிக்காக விளையாடியவர் ஆவார் . புனே அணியில் சிறந்த பந்து வீச்சாளராக செயல் பட்டதால் இந்த முறை சென்னை அணி எடுத்துள்ளது


பிராவோ

சென்னை அணியின் செல்ல பிள்ளை . சிறந்த நடன கலை நிபுணர் இவர் . கடைசி ஓவரில் பந்துகளை நாளா புறமும் சிதரடிபர் . ரீடைன் முறையின் சென்னை அணி இவரை எடுத்துள்ளது .

டு ப்லேசிஸ் 

இவர் மிக சிறந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் . அந்த அணியின் சிறந்த கேப்டன் பொறுப்பை இன்றுவரை தக்கவைத்துள்ளார் .


மேலும் இரண்டு இளம் வீரர்களான kshitiz sharma மற்றும் chitanya bishnoi போன்றோரை சென்னை அணி எடுத்துள்ளது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here