சின்னத்திரை என்பது தற்போது பல திறமையாளர்களை கண்டுப்பிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றது. புது புது திறமையாளர்கள் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து கலக்கி கொண்டு இருக்கின்றனர் .

அந்த வகையில் போட்டியில் கலந்துக்கொள்ள வயது ஒரு தடையில்லை என்று நிரூபித்தவர்கள் பலர்.

அப்படி தற்போது பிரபல தொலைக்காட்சியில் கலக்கி வருபவர் தான் ரமணியம்மா, இவரை அந்த நிகழ்ச்சியில் எல்லோரும் ராக் ஸ்டார் என்று தான் அழைத்து வருகின்றனர்.

நாடு கடந்து பலரும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இவரது பாடல் மக்களுக்கு பிடித்த ஓன்று.

சமீபத்தில் இவரை அந்த நிறுவனம் சிங்கப்பூர் வரை விமானத்தில் அழைத்து சென்றுள்ளது. இது குறித்து மேடையில் பேசியவர் இந்த புகழ் எனக்கு போதும். இனி கூடுதல் காசுக்காக நான் வேறெந்த சானலுக்கும் போக போவதில்லை.

என்னை வேறு டிவியில் இனிமேல் நீங்கள் பார்க்க முடியாது. நான் என் பழைய வாழ்க்கையை மறக்க மாட்டேன். வெற்றி, தோல்வியையும் தாண்டி என் பழைய பாதையிலேயே போய் விடுவேன் என கூறினார்.

உடனே நடுவர்கள் நீங்கள் மற்ற இடங்களுக்கும் போக வேண்டும். வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here