தற்போது உள்ள ஆணாகட்டும் பெண்ணாகட்டும் முகம் வெள்ளையாக இருக்க வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறார்கள்.அதற்காக பலபல கிரீம்களை வாங்கி போடுகின்றனர்.ஆனால் இது எல்லாம் பலன் அளிக்கிறத என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் இருக்கும்.ஆனால் நாம் வீட்டிலேயே செய்யும் சில முறைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.இந்த பதிவில் கொடுக்கபட்டிருக்கும் தகவல்கள் மூலம் உங்களது முகம் கண்டிப்பாக பளபளக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் ஃப்ரிட்ஜை திறந்து பாருங்கள். ஃப்ரிட்ஜில் காய்கறி மட்டும் தான் இருக்கிறதா? என்ன காய்கறி உள்ளது என்று பாருங்கள். அவற்றைக் கொண்டு நைட் தூங்கும் முன் ஃபேஸ் பேக் போடுங்கள். இப்படி தொடர்ந்து 2 நாட்கள் செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமைகள் மற்றும் இதர சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாக காணப்படும்.இங்கு சரும நிறத்தை அதிகரிக்க உதவும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.அதனை பயன்படுத்தி உங்கள் அழகை மெருகேத்துங்கள்.

உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்

* சில துண்டுகள் உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

* பின் அத்துடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

* இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், உங்கள் முகப் பொலிவு அதிகரிக்கும்.

கத்திரிக்காய் ஃபேஸ் பேக்

* கத்திரிக்காயை துண்டுகளாக்கி அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு கிளின்சர் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

* இந்த பேக்கை மாதத்திற்கு 2 முறை செய்யுங்கள். இதனால் உங்கள் முகம் பளிச்சென்று மாறுவதைக் காணலாம்.

பீட்ரூட் ஃபேஸ் பேக்

* பீட்ரூட்டை துண்டுகளாக்கி, நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அத்துடன் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

* இந்த ஃபேஸ் பேக்கை மாதத்திற்கு 3 முறை செய்து வந்தால், முகம் பிரகாசமாகவும், வெள்ளையாகவும் மாறும்.

தக்காளி மாஸ்க்

* தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை கழுத்து மற்றும் முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

* பின் 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி தினமும் செய்து வந்தாலே, முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here