உண்ணும் உணவுப் பொருட்களில் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானது என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் பழங்களுள் சிலவற்றை ஒருசிலவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.பல ஆய்வுகளில் சில பழங்களை வேறு உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால், அதனால் மிகுந்த அசௌகரியத்தை உணர்வதோடு, குழந்தைகளுக்கு அது மிகுந்த ஆபத்தையும் ஏற்பத்தும் என தெரிய வந்துள்ளது. எந்த பழங்களுடன் எதை சேர்த்து சாப்பிட்டால் எப்படி ஆபத்து ஏற்படும் என்பதை கீழே பார்ப்போம்.

வாழைப்பழத்தை புட்டிங்கில் சேர்த்தால், அதனால் வயிறு பாரமாக இருப்பதை உணர்வதோடு, அது மனநிலையை மந்தப்படுத்தி, உடலில் டாக்ஸின்களின் உற்பத்தியை அதிகரித்து, குழந்தைகளாக இருந்தால், ஆபத்தையே ஏற்படுத்திவிடும். எனவே கவனமாக இருங்கள்.

ஆரஞ்சு மற்றும் காரட் இந்த காம்பினேஷன் பல நேச்சுரல் ஜூஸ் கடைகளில் பிரபலமானது. இந்த இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால், அதிகமான அமிலச் சுரப்பு, நெஞ்செரிச்சலுடன், சிறுநீரக அமைப்பும் பாதிக்கப்பட்டு, தீவிர நோய்க்கு வழிவகுக்கும்.

அன்னாசியில் புரோமிலைன் உள்ளது. இதை பால் அல்லது தயிருடன் கலந்து சாப்பிட்டால், உடல் முழுமையாக நச்சுக்களாகிவிடும். மேலும் இக்கலவையை குடித்த பின், குமட்டல், வாய்வுத் தொல்லை, தலைவலி, வயிற்று வலி மற்றும் சில நேரங்களில் வயிற்றுப் போக்கு கூட ஏற்படும். ஆகவே தப்பித்தவறியும் இக்கலவையை குழந்தைகளுக்கு கொடுத்துவிடாதீர்கள்.

கொய்யாப்பழம் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக சாப்பிட்டால், அதனால் அசிடோசிஸ் மற்றும் வாய்வு உற்பத்தி செய்யப்பட்டு, வயிற்று உப்புசத்துடனும், குமட்டல் உணர்வையும், தலைவலி மற்றும் வயிற்று வலியையும் சந்திக்க நேரிடும்.

பால் சேர்த்த செரில் அல்லது ஓட்ஸை சாப்பிடும் போது, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் பழக்கம் இருந்தால், உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில் இப்படி உட்கொள்ளுட் போது, ஆரஞ்சு ஓட்ஸில் உள்ள ஸ்டார்ச்சை செரிமான மடையச் செய்யாமல் தடுத்து, செரிமான பிரச்சனையை உண்டாக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here