நடிகைகளின் உடலமைப்பை ஆண்கள் வர்ணிப்பது வழக்கம்.அதுவும் பாலிவூட் என்றால் சொல்லவே வேண்டாம் எப்பவுமே பல பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும்.பாலிவுட் என்றால் சர்ச்சை என்று பொருள். அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நடிகர், நடிகைகள் தான் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருக்க முடியும் என்ற எழுதப்படாத விதி ஒன்று உள்ளது.

தமிழ், தெலுங்கு என வண்டியை ஒட்டிக்கொண்டிருந்த நடிகை டாப்சி பாலிவுட்டில் கால் பாதித்தார். ஹிந்தி சினிமா இவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ப்பு கொடுத்துள்ளது. சமீபத்தில், வெளியான இவரின் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது டாப்சியின் மார்க்கெட் வேறு லெவலில் உள்ளது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட டாப்சியிடம், நீங்கள் ஒரு நடிகையுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன் என்றால் எது எந்த நடிகையாக இருப்பார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. சற்றும் யோசிக்காமல் நடிகை ஜாக்லின் தான் என்று பதிலளித்தார் டாப்சி.

தொடர்ந்து பேசிய நடிகை டாப்சி, அவருடன் நான் ஏற்கனவே சேர்ந்து நடித்துவிட்டேன். அவருடைய உடலமைப்பை பார்த்தாலே எனக்கு பொறாமையாக உள்ளது. அவ்வளவு கவர்ச்சியான உடலமைப்பை உடையவர் அவர். அவரை இனிமேல் நான் பார்க்கவே கூடாது” என்று கூறினார். ஒரு நடிகையை உடலை பற்றி சக நடிகை ஒருவரே இப்படி கண்ட்றாவியாக வர்ணிக்கிறாரே என்று மண்டையை சொரிந்தனர் இதனை கேட்ட அங்கிருந்த பிரபலங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here