இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி  ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. கடந்த சில நேரங்களில் மட்டும் ஒரு ஒரு அணியும் போட்டி போட்டுகொண்டு தனது அணிக்கான வீரர்களை எடுத்து கொண்டிருகின்றன . சென்னை அணி எந்த வீரர்களை எடுக்க வேண்டும் ஏற்கனவே முடிவு செய்து வைத்து இருக்கிறது. அஸ்வினை ஆர்டிஎம் மூலம் எடுக்க முடியாமல் போனதால் புதிய வீரர்களை எடுத்துள்ளது. ரசிகர்கள் மனதில் இல்லாத வீரர்களாக இருந்தாலும் அனுபவமிக்க வீரர்களை எடுத்துள்ளது .இந்த வருடத்தில் சென்னை அணியின் தேர்வு முறையே மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.


சென்னை அணிக்கான வீரர்களில் ஏற்கனவே மூன்று வீரர்களை தக்க வைத்துள்ளது. இவற்றில் டோனி, ரைனா மற்றும் ஜடேஜா இவர்கள் இப்பொழுது சென்னை அணியில் இருகின்றனர் .  மீதம் இருக்கும் 2 ஆர்டிம் வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு வீரர்கள் எடுக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் இதை அஸ்வின் மீது பயன்படுத்த முடியாது என்பதால் அவர் எடுக்கப்படவில்லை இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் ஆள்தனர் .

ஆர்டிஎம்


சென்னை அணியில் ஏற்கனவே மூன்று வீரர்களை எடுத்த நிலையில் மீதம் இருக்கும் இரண்டு வாய்ப்புகளில் ஏதேனும் இரண்டு வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் . முதல் ஆர்டிஎம் மூலம் ஐபிஎல் ஏலத்தில் டியூ பிளசிஸ் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 1.60 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரை ஆர்டிஎம் மூலம் சென்னை எடுத்துள்ளது.

சென்னை அணியின் அடுத்த  ஆர்டிஎம் வாய்ப்பை  ரசிகர்கள் மற்றும் சென்னை அணியின் விருப்பமான வீரரான வெய்ன் பிராவோ ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 6.40 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரை ஆர்டிஎம் மூலம் சென்னை எடுத்துள்ளது. இதனால் சென்னை அணிக்கு இருந்த ஆர்டிஎம் வாய்ப்புகள் முடிந்துள்ளது.

ஹர்பஜன் சிங்

கடந்த சில நாட்களாகவே தமிழ் மக்களின் மீது ஆர்வம் காட்டியவரை சென்னை அணி எடுத்துள்ளது.  2 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரது குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். அஸ்வினுக்கு பதில் இவர் ஸ்பின் பவுலாராக இருப்பார்.


கேதார் ஜாதவ்

யாரும் எதிர் பார்க்காத நிலையில் சென்னையால் ஐபிஎல் ஏலத்தில் கேதார் ஜாதவ் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் இந்திய அணிக்காகவும் கடந்த சில போட்டிகளில் பங்கு பெற்று சிறப்பாக ஆடியதால் இந்த விலைக்கு எடுக்கபட்டார் என எதிர்பார்க்கபடுகிறது . இதற்கு முன்பு இவர் கொச்சி, டெல்லி, பெங்களூர் ஆகிய அணிக்காக விளையாடி இருக்கிறார். இவர் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.


வாட்சன்

கடந்த 10 ஐபிஎல் போட்டிகளில்   கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருபவர் வாட்சன் இவர் ஆஸ்திரேலியா அணியின்  மிகச்சிறந்த வீரராக கருதபடுபவர்.வர் நான்கு கோடிக்கு வாங்கப்பட்டார்


அம்பதி ராயுடு

ஐபிஎல் போட்டிகள் என்றாலே இவரது பெயர் அடிபடாமல் இருக்காது அந்த அளவிற்கு கடந்த சில ஆட்டங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அம்பதி ராயுடு.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 2.2 கோடிக்கு அம்பதி ராயுடு எடுக்கப்பட்டார். இவரது வருகை சென்னை அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.


கரன் சர்மா 


கரன் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 5 கோடிக்கு கார்ன் சர்மா எடுக்கப்பட்டார். இவருடைய குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். இந்தியாவை சேர்ந்த வளரும் பவுலர்களில் இவரும் ஒருவர்.

இம்ரான் தாஹிர்

சுழற் பந்து வீச்சில் தற்போது ஜாம்பவானாக இருப்பவர் இம்ரான் தாஹிர் இவர் தென்னபிரிக்க வீரர் ஆவார். இவர்  t20 போட்டிகளின் சிறந்த வீரர் ஆவர் அதனால் இவரை எடுத்தது  சென்னை அணிக்கு பெரிய பலமாக இருக்கும்.

மேலும் வீரர்கள் எடுக்கப்பட உள்ளனர். இன்னும் சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஆக சிறந்த ஆட்டகாரர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பது வருத்தம் தான் .

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here