கோபிகா  தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்  . இவர் இயற்பெயர் கேர்ளி அண்டோ ஆகும். இவர் கேரளாவில் பிறந்தார், இவரின் தந்தை ஹன்டோ பிரான்சிஸ் மற்றும் தாய் டெசி ஹன்டோவின் ஆகியோர்கள் ஆவார்.

இவர்  கடந்த 2004ஆம் ஆண்டு இயக்குனர் சேரன் நடிப்பில் வெளிவந்த ஆட்டோகிராப் படத்தில் நடித்து தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார் . இந்த படத்தில் சேரனுக்கு இன்னொரு ஜோடியாக லலிதா என்னும் கேரக்டரில் நடித்திருப்பார் கோபிகா. இந்த படத்தில் நடித்த பின்னர் தான் தமிழில் பல வாய்ப்புகள் இவருக்கு வர தொடங்கியது .

விமான பணிப்பெண்ணாக ஆகவேண்டும் என்ற ஆசை இருந்த இவருக்கு  2002ஆம் ஆண்டு ‘பிரநயமணிதுவல்’ என்ற மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் கோபிகா.

சிறந்த நடிப்பை நிருபித்த அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர தொடங்கியது. இதன்காரணமாக அவரும் ஆர் ஹோஸ்டஸ் ஆசையை விட்டுவிட்டு சினிமா ட்ராக்கில் வந்து சேர்ந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 30 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்தார்.

அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு அஜிலேஷ் சக்கோ என்பவரை திருமணம் செய்துகொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆனார் கோபிகா. திருமணதிற்கு பின் நடிப்பிற்கு முழுக்கு போட்ட அவருக்கு அதற்க்கு பின் எந்த வாய்ப்புகளும் வராத நிலையில் குடும்ப நலனில் ஆர்வம் செலுத்தினார்.

இந்த இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர்களை கவனித்துக்கொண்டு குடும்பத்தையும் பாரர்த்துக்கொண்டு இருக்கிறார் கோபிகா.

இவரின் தற்போதைய புகைப்படங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here