மனிஷா கொய்ராலா நேபாளில் பிறந்தார். நேபாள-இந்திய நடிகையான இவர், ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டியம், மணிப்பூரி நன்கு அறிந்தவர். மனிஷாவின் தாத்தா பிஸ்வேஸ்வர்பிரசாத் கொய்ராலா நேபாள நாட்டின் பிரதமராக இருந்தவர். மேலும், அப்பா பிரகாஷ் கொய்ராலா அந்த நாட்டின் பல துறைகளின் அமைச்சர் ஆவார்.மனிஷாவின் அண்ணன் சித்தார்த் ஒரு நடிகர் ஆவார்.

இப்படி ஒரு பிரபலமான பெரிய குடும்பத்தில் பிறந்த மனிஷா உத்திரபிரதேசத்தில் உள்ள பள்ளியில் படித்தார். நேபாள மொழியில் இவர் நடித்த முதல் படமான ஃபெரி பெட்டாலா 1989ல் வெளிவந்தது. ஹிந்தியில் இவரது முதல் படமான சௌடாகர் 1991ல் வெளிவந்தது.

பல வட இந்திய படங்களில் நடித்திருந்தாலும் 1995ஆம் ஆண்டு வெளிவந்த பாம்பே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா. பின்னர் பல தமிழ் படங்களில் நடித்து பெரும் புகழ் அடைந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு நேபால் தொழிலதிபர் சாம்ராட் தகல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் பிலாந்தில் ஹனிமூன் கொண்டாடினார். ஆனால், 6 மாதத்தில் மண வாழ்க்கை கசந்து போனது. இதனை விவாகரத்து கோரி கடந்த 2012ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றார்.

இப்படி இவர் வாழ்வில் மெது மெதுவாக கருமை சூழ ஆரம்பித்து விட்டது . பின்னர் தனது வாழ்கையை தனியாக கடத்திய அவருக்கு  புற்றுநோய் தாக்கியது. இதனால் அமெரிக்காவில் சென்று தனது தலையமுடியை மொட்டை அடித்துக்கொண்டு சிகிச்சை பெற்று புற்றுநோயில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தார்.

மேலும், நேபால் நாட்டில் இருந்து இளம் பெண்களை அழைத்து சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்துபவகளுக்கு எதிராகவும் போராடி வருகிறார். தற்போது நேபாலில் நல்லெண்ணத் தூதராக பணியாற்றியும் பொது சேவையும் செய்து வருகிறார். படங்களில் நடிக்க இபொழுது அவருக்கு விருப்பம் இல்லை என தெரிய வருகிறது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here