நாம் தமிழ் சினிமா மட்டுமல்லாது உலக சினிமா வரை எத்தனையோ திருடன் சமந்தப்பட்ட கதைகளை பார்த்திருப்போம். அப்படங்களிலும் புது புது தொழில்நுட்பங்களை கொண்டு திருடுவார்கள் இது நமக்கு ஆச்சர்யம் அளிக்க கூடியதாகவும் இருக்கும் . இப்படி தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படம் தான் அயன் இப்படத்தில் வைரங்களை திருடும் காட்சி அற்புதமாக காட்சி படுத்தப்பட்டு இருக்கும். அதே போலவே நிஜ திருடன் உள்ளான் என்று சொன்னால் நீங்கள் ஆச்சர்ய படுவீர்கள் ஆமாம் உண்மையில் அப்படி ஒருத்தன் இருக்கின்றானாம் அவனை பற்றி கிழே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.

மேலும் இதையும் பார்க்கவும் வீடியோவிற்கு பின்: தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படத்தின் வைரலாகும் டீஸர் இதுதான்!

‘த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’ (The Extraordinary Journey of the Fakir) இது தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம். இதே தலைப்பில் ஃப்ரென்ச் எழுத்தாளர் ரோமைன் ப்யூர்டோலஸ் எழுதிய நாவலை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளனர் மர்ஜேன் சட்ரபி (Marjane Satrapi) மற்றும் கனடா இயக்குநர் கென் ஸ்காட்.

இசையமைப்பாளர் நிகோலஸ் எரெரா மற்றும் அமித் திரிவேதி (இரண்டு இந்திப் பாடல்கள்) இசையமைத்துள்ளனர். பெரேனிஷ் பெஜோ, உமா துர்மான், பர்கத் அப்தி, எரின் மோரியாட்டி, அபேல் ஜஃப்ரி, ஜுக்னாட் மற்றும் அலெக்ஸஸாட்ரா தாத்ரியோ உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஆங்கிலம் மற்றும் ஃபரென்ச் மொழிகளில் தயாராகியிருக்கும் படம் மே 30-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டீஸர் விடியோ அண்மையில் படக்குழுவினரால் வெளியிட்டப்பட்டது.

இப்படத்தின் கதை தலைப்பைப் போலவே சுவாரஸ்யமானது.தனுஷின் கதாபாத்திரத்தின் பெயர் அஜாதசத்ரு லாவாஷ் படேல். அஜா ஒரு மேஜிக் நிபுணன். இந்தியாவில் அவனுக்கு கிடைத்ததெல்லாம் வறுமைதான். அவனுடைய அம்மா அவனை ஒரு ரகசிய நோக்கத்துக்காக பாரிஸ் நகரத்தில் இருக்கும் ஈஃபில் டவருக்கு அனுப்புகிறார். டாக்ஸி ட்ரைவர் ஒருவனுடன் ஏற்படும் திடீர் சண்டையால் அஜா, பாரிஸின் பிரம்மாண்டமான ஃபர்னிச்சர் கடையில் உள்ள ஒரு அலமாரிக்குள் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்கிறான்.

அந்த அலமாரி விற்பனையாகி உடனடியாக ஏற்றுமதி செய்யப்பட்டு ஐரோப்பாவை சுற்றி வருகிறது. இந்தப் பயணத்தில் பலவிதமான மனிதர்களை சந்திக்கிறான் அஜா. வாழ்க்கைப் பற்றிய புரிதல் அவனுக்கு விரிவடைகிறது.

தான் கற்ற வித்தையான மேஜிக்கின் மீது நம்பிக்கை வைத்து வீடு திரும்புகிறானா அவனுக்கு பாரீஸில் என்ன ஆகிறது என்பது தான் இப்படத்தின் கதை.  மும்பையில் இருந்து பாரீஸ் செல்லும் தனுஷின் பயணம்தான் படத்தின் மையக் கதை.

‘ஒவ்வொரு நடிகரிடமிருந்தும் அக்கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை பெற முயன்றுள்ளோம். குறிப்பாக தனுஷுடன் பணி புரிந்தது உற்சாகமாக இருந்தது’ என்று பாராட்டியுள்ளார் கென் ஸ்காட்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here