விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர் என, படிப்படியாக திரைத்துறையில் கால் பதித்து தற்போது ஓரிரு படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருப்பவர் ஆர்.கே.சுரேஷ்.

இவர் படங்களில் நடித்து வந்தாலும், படங்கள்  தயாரிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கடந்த ஆண்டு இவர் தயாரிப்பில் வெளிவந்த தர்மதுரைதிரைப்படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்  சில மாதங்கள் முன்பு திருமணம் செய்ய போவதாக தனியார் தொலைக்காட்சி நடிகை திவ்யாவை அறிமுகப்படுத்தினார். அதைத்தொடரந்து, திருமணம் பற்றி எந்த செய்தியையும் வெளியிடாமல் இருக்க இருவருக்கும் மனஸ்தாபம், பிரிந்துவிட்டார்கள் என்று பல பத்திரிகைகளில் பேசப்பட்டது.

இந்த நிலையில் இதை கேள்விப்பட்ட அவர்கள், திருமணத்தை பற்றி கூறியதாவது: ஜாதகத்தில் சில பிரச்சனைகள் இருப்பதால் தற்போதைக்கு திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம். மற்ற படி திருமணம் நின்றுவிட்டதாக கூறுவது எல்லாம் வதந்தி. யாரும் நம்ப வேண்டாம் என்று கூறினார்கள்.

அடுத்த வருடம் அவர்களது திருமணம் நடக்கும் என்று வெளிவரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று இவர்கள் இருவரும் தங்களது நெருங்கிய வட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும், தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர் ஆர்.கே. சுரேஷ், இவர் தற்போது, பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்து வருகின்றார். அதோடு அடுத்து shikkari shambhu என்ற படத்தில் இவர் ஏற்று இருக்கும் கதாபாத்திரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தயாரிப்பாளர் சங்க குளறுபடிகள் நிலவுவதால் இவர் திருமணத்தை நிறுத்தியிருக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here