நடிகர் சிம்பு சமீப காலமாகவே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.பிரச்சனை என்பது சிம்புவின் உடன்பிறந்த சகோதரன் போல எப்போதும் அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது.மைக்கல் ராயப்பன் சமீபத்தில் அளித்த ஒரு புகாரின் பேரில் எடுக்கப்பட்ட பெரிய பிரச்சனை சிறிது நாட்களுக்கு முன்பு விஸ்வரூபம் எடுத்தது.நடிகர் சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுக்கும் அளவிற்கு சென்றது ஆனால் அதன் பின்பு சிம்பு பிரச்சனைகளை தாண்டி மணிரத்னம் படத்தில் கமிட்டானார்.சிம்பு மேல் இருக்கும் பெரிய புகார் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஒழுங்காக வராதது தான்.

ஆனால் தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் மணிரத்னம் திரைப்படத்தில் அவர் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் நடித்து கொண்டிருப்பதாக தெரிகிறது.இந்த நிலையில் தற்போது சிம்புவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதில் சிம்பு ஜிம்மில் வொர்க்அவுட் செய்து விட்டு இருப்பது போன்ற புகைப்படமாக உள்ளது.இது சிம்பு ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிம்பு தற்போது அவர் மீது உள்ள புகார்களுக்கும் பழிகளுக்கும் ஒரு பதிலடியாக மணிரத்னம் திரைப்படம் அமையும் என சிம்பு ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here