தமிழ் சினிமா மட்டுமல்லாமல்  தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ஹீரா

முரளியுடன் இதயம், அஜித்துடன் காதல் கோட்டை, திருடா திருடா போன்ற படங்களில் நடித்திருந்தவர் நடிகை ஹீரா. பி.எஸ்.சி சைக்காலஜி படித்துள்ள இவர் 1991ம் ஆண்டு இதயம் படம் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தவை . பல முன்னணி இயக்குனர்களின் பிடித்த நாயகியாக அப்போது வளம் வந்தவர் .

பின் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என மொழிகளில் வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இவரின் சினிமா பயணத்தின் போது அஜித்துடன் கிசுகிசுக்கப்பட்டார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக கூட நிறைய செய்திகள் வந்தன.

காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இவருக்கு பட வாய்ப்புகள் குறைத்து போக 2002ம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தும் பெற்றார்.

தற்போது ஒரு என்.ஜி.ஓ ஆரம்பித்து பலருக்கு வேலை கொடுத்து வருகிறார்.

ஹீராவின் தற்போதைய புகைப்படங்கள்:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here