தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு பிறகு அதிகப்படியான ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர்கள் அஜித்தும் விஜய்யும்.இதில் விஜய் தனக்கு எற்றார்போல்கதைகளை தேடி சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றி வெற்றிப்படங்களை கொடுத்துவருகிறார்.ஆனால் அஜித் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் வீரம் படம் தொடர்ந்து இன்று விவேகம் திரைப்படம் வரை சிறுத்தை சிவா இயக்கத்திலேயே நடித்து வருகிறார்.இந்த கூட்டணி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய வெற்றிகள் ஒன்றும் தரவில்லை.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் தற்போது சிறுத்தை சிவாவே இயக்கிகொண்டிருக்கிறார்.தற்போது அஜித்தின் அடுத்த படமான 59 வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்ற தகவல் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களை சமூகத்திற்கு கொடுத்து வருபவர் இயக்குனர் மோகன் ராஜா. இவர் விஜயை வைத்து படம் இயக்கி விட்டார்.இதனையடுத்து விரைவில் அஜித்தை இயக்க போவதாக கூறி வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவரிடம் அஜித்தை இன்னும் இயக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

 

அதற்கு மோகன் ராஜா நான் எப்போதும் ஒரு கதையை சொன்னால் கேட்பவர்கள் ஓகே சொல்லி விட வேண்டும் என நினைப்பவன். அப்படி அஜித்தை இம்ப்ரெஸ் செய்ய மாஸான கதை ஒன்றை உருவாக்கி உள்ளேன்.

விரைவில் அந்த கதையை அவருக்கு சொல்லி அவரிடம் சம்மதம் வாங்கி விடுவேன் என கூறியுள்ளார். இதனால் தல-59 படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர் லிஸ்டில் மோகன் ராஜாவும் இணைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here