நடிகர் அஜித் குமார் அவ்வப்போது எளிய மக்களுக்கு உதவி செய்து வருவது வழக்கம்.அதை அவர் வெளியே கூறாவிட்டாலும் எப்போதாவது யார் மூலமாகவோ வெளிவந்துவிடும்.அஜித்குமார் இப்படிப்பட்ட காரியம் செய்வது இயல்பு.ஆனால் தற்போது அதேபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது,ஆனால் இந்த முறை செய்தது அஜித்குமார் அல்ல.அவரின் தீவிர ரசிகர்கள்.அஜித் ரசிகர்கள் ஏற்கனவே ரத்ததானம் செய்வது பள்ளி குழந்தைகளுக்கு உதவுவது,ஆதரவற்றவர்களுக்கு உடை,சாப்பாடு என கொடுப்பது மேலும் பல சமூக நல்ல செயலை செய்து வருகிறார்கள் அது அனைவருக்கும் தெரியும்.

அதே போல் தான் இங்கு நடந்துள்ளது.ஆம் அஜித் மகள் அனோஷ்கா பிறந்தநாளையொட்டி சிவகாசி அஜித் ரசிகர்கள் ரோட்டில் இருக்கும் ஆதரவற்ற முதியோருக்கு உதவிகளை செய்து அவருக்கு வேண்டியதை கொடுத்துள்ளார்கள்.இந்த செய்தி சமூகவளைதலங்களில் தீயாய் பரவுகிறது.

நடிகர் அஜித்குமார் இவ்வாறு உதவிகள் செய்வதை எப்போதும் வாடிக்கையாக வைத்திருக்கும் நிலையில் அவரது ரசிகர்களும் அதை பின்பற்றுவது ஏனைய அஜித் ரசிகர்களுக்கு பெருமையை ஏற்படுத்துகிறது.

மேலும் அஜித்குமார் அவரது ரசிகர்களை சரியான வழியில் வழிநடத்தி செல்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here